ஓ.பி.எஸ். சேர்ந்ததால் தி.மு.க.வுக்கு நஷ்டம் தான்: வெல்லமண்டி நடராஜன் பேட்டி

அமைதியாகவே இருப்பது ஓ.பி.எஸ்.சுக்கு ஒரு கலை. அதனால்தான் எங்களுக்கு இந்த நிலை.ஓ.பி.எஸ். இணைந்திருப்பது மூலம் தி.மு.க.வுக்கும் நஷ்டம் ஓ.பி.எஸ்.க்கும் நஷ்டம்தான் ஏற்படும்.
ஓ.பி.எஸ். சேர்ந்ததால் தி.மு.க.வுக்கு நஷ்டம் தான்: வெல்லமண்டி நடராஜன் பேட்டி
Published on

ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி நேற்று எடப்பாடி பழனி சாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்த வெல்லமண்டி நடராஜன் இன்று தனது ஆதரவாளர்களுடன் வந்து அடையாறில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓ. பன்னீர்செல்வம் தி.மு.க.வில் சேர்ந்ததன் மூலமாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு துரோகம் இழைத்து விட்டார். அவரால் எங்களுக்கு சோர்வும் வருத்தமும்தான் ஏற்பட்டது.

கடந்த 27-ந்தேதி மாலை நான் ஓ.பி.எஸ்.சை பார்த்தவரை அவர் என்னிடம் தி.மு.க.வில் இணைய உள்ளது குறித்து எந்த தகவலும் சொல்லவில்லை. அலைபேசியில் அழைத்தபோதும் ஓ.பி.எஸ். என் அழைப்பை ஏற்கவில்லை.

இந்த நிலையில் அவசரமாக வர சொல்லி அழைத்ததால் நேற்று காலை சென்னை வந்தேன். அவசரமாக அழைத்தது ஏன் என்றேன். அதற்கு ஆதரவாளர்கள் சொன்ன தகவல் எனக்கு ஆச்சரியத்தையும் மன கலக்கத்தையும் ஏற்படுத்தியது.

ஓ.பன்னீர் செல்வத்திடம் போனில் பேசி போய் வாருங்கள் என்று சொல்லி விட்டு நான் அலைபேசி அழைப்பை துண்டித்து விட்டேன். நான் ஆரம்ப காலம் முதல் அ.தி.மு.க.வில் இருந்தவன். ஓ.பி.எஸ். வுடன் 10 பேர் அமர்ந்த மேடையில் கடைசியில் நான் மட்டும்தான் எஞ்சியிருந்தேன். அமைதியாகவே இருப்பது ஓ.பி.எஸ்.சுக்கு ஒரு கலை. அதனால்தான் எங்களுக்கு இந்த நிலை. அமைதியாக இருப்பதன் மூலமே சாதித்து விடலாம் என்று நினைப்பார்.

ஓ.பி.எஸ். இணைந்திருப்பது மூலம் தி.மு.க.வுக்கும் நஷ்டம் ஓ.பி.எஸ்.க்கும் நஷ்டம்தான் ஏற்படும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. மீண்டும் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் வெற்றிக்கனியை அம்மாவின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com