திருச்செந்தூர் கோவிலில் 2-வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

ஓ.பன்னீர் செல்வம் திருச்செந்தூர் வருகையை அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் குவிந்தனர். 2-வது நாளாக இன்று காலை திருச்செந்தூர் கோவிலில் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் கோவிலில் 2-வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்
Published on

திருச்செந்தூர்:

முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. உரிமை மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்தார்.

அங்கு அவர் சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை தட்சணாமூர்த்தி சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.

தரிசனம் முடித்து வெளியே வந்த அவர், கோவில் வாசலில் உள்ள டீக்கடையில் டீ அருந்தினார். பின்னர் விருந்தினர் மாளிகை செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் சுவாமி தரிசனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உலக மக்கள் நலனுக்காக வேண்டி கொண்டேன் என்றார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறினீர்களே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தை முடிய இன்னும் 10 நாட்கள் உள்ளன என்றார். பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

ஓ.பன்னீர் செல்வம் திருச்செந்தூர் வருகையை அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 2-வது நாளாக இன்று காலை திருச்செந்தூர் கோவிலில் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com