MLA பதவியை ராஜினாமா செய்கிறார் ஓ.பி.எஸ்.? - தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்

முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.ஆளும் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
MLA பதவியை ராஜினாமா செய்கிறார் ஓ.பி.எஸ்.? - தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்
Published on

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.

இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளில், ஆளும் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது MLA பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அவருடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. உசிலம்பட்டி அய்யப்பனும் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

MLA பதவியை ராஜினாமா செய்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து தி.மு.க.வில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோரும் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.பி.எஸ். தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com