நா.த.க.- த.வெ.க இடையே மோதல்- த.வெ.க. நிர்வாகி உள்பட 3 பேர் கைது

தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
நா.த.க.- த.வெ.க இடையே மோதல்- த.வெ.க. நிர்வாகி உள்பட 3 பேர் கைது
Published on

தேனியில் நாதக- தவெக இடையே நடந்த மோதல் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இருதரப்பு மோதலில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

தவெக தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கவுதம், தனவந்தன், வசந்த் ஆகிய மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவெக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள தவெக தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி, நகர செயலாளர் சலாம் ஆகியோருக்கு போலீசார் வலைவீசப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com