மதுரையில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயர்: மு.க. ஸ்டாலின்

தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை ரூ.213 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.மு.க. ஸ்டாலின் 21-ந்தேதி திறந்து வைக்க இருக்கிறார்.
மதுரையில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயர்: மு.க. ஸ்டாலின்
Published on

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நீண்ட பாலங்களை அமைத்து சாதனை படைத்துவரும் நமது #DravidianModel-இல், அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோ மீட்டர் நீளமுள்ள "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்"!

தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தனக்கெனப் பாதையை உருவாக்கி, நம் தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான #NetajiSubashChandraBose அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன்.

ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21-ஆம் நாள் என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com