என்.டி.ஏ. கூட்டணியில் தேமுதிக - இ.பி.எஸ். பேச்சுவார்த்தை?

கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.விடம் அ.தி.மு.க. தரப்பு பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.9 தொகுதிகள் கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க. தலைமையிடம் கூறியதாக தெரிய வந்துள்ளது.
என்.டி.ஏ. கூட்டணியில் தேமுதிக - இ.பி.எஸ். பேச்சுவார்த்தை?
Published on

வருகிற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக சென்னையில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று அறிவித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்தார்.

நேற்று அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் விரிவடைகிறது.

பா.ம.க., தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

நேற்றே கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.விடம் அ.தி.மு.க. தரப்பு பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கொடுக்க வேண்டும் என தே.மு.தி.க. வலியுறுத்தியதாகவும், 9 தொகுதிகள் கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க. தலைமையிடம் கூறியதாகவும் தெரிய வந்துள்ளது.

பா.ம.க.வில் ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசம் ஏற்பட்ட பின் பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com