தேசிய கல்விக் கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல காவிக் கொள்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம்.இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை.
தேசிய கல்விக் கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல காவிக் கொள்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

கல்வியில் இருந்து மக்களை நீக்கும் இனைத்து வேலைகளையும் தேசிய கல்விக் கொள்கை செய்கிறது. தேசிய கல்விக் கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல, காவிக் கொள்கை.

இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை. குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர தேசிய கல்விக் கொள்கை மூலம் முயற்சி- அதனால் தான் எதிர்க்கிறோம்.

ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம். இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை.

ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து விட்டு 7 ஆண்டுகளாக கட்டாமல் இருப்பது தான் நாகரிகமா ? தமிழ்நாட்டில் பேரிடர் நடந்து 2 ஆண்டுகள் கடந்தும், நிதியை வழங்காமல் இழுத்தடிப்பது தான் நாகரிகமா ?

இந்தியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி தர மாட்டேன் என கூறுவதை விடவும் அராஜகம் இருந்து விட முடியுமா ?

திமுக எம்பிக்களின் போர்க்குணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com