நாமக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை- இ.பி.எஸ் கண்டனம் #Can_SHE_LiveInTN

உலகமகளிர்தினம்- ஆன இன்று, அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது. சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை.
நாமக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை- இ.பி.எஸ் கண்டனம் #Can_SHE_LiveInTN
Published on

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு , உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டுள்ளதாக , #உலகமகளிர்தினம்- ஆன இன்று, அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது.

ஸ்டாலின் அரசின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டால், சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை.

இப்படி ஒரு கேவலமான ஆட்சிக்கு பொறுப்பான நீங்கள், எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் இன்னொரு முறை ஆட்சி செய்ய கேட்கிறீர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களே?

ஒரு 7 வயது சிறுமிக்கு தெருவில் பாதுகாப்பு இல்லாத ஆட்சிக்கு, "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற வெற்று விளம்பரம் ஒரு கேடா?

குமாரபாளையம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் ,

அப்பச்சிளம் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் , ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com