நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டார்- முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு

நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார்.
நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டார்- முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு
Published on

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகிய முக்கிய தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளார்.

சேலத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்த நிலையில் இன்று டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள தனது தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாகவும், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com