தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி... பா.ஜ.க.வில் இருந்து அமைச்சர்கள் - இ.பி.எஸ்.க்கு செக் வைத்த நயினார்

சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி... பா.ஜ.க.வில் இருந்து அமைச்சர்கள் - இ.பி.எஸ்.க்கு செக் வைத்த நயினார்
Published on

சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பா.ஜ.க. பணிமனை திறப்பு விழாவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.

* பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

* பிரதமரின் தமிழக வருகைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியிடம் கலந்து பேசி அதன்பின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

* தமிழ்நாட்டில் வெகு விரைவில் தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சி மலரும்.

* எம்.ஜி.ஆர். வழியில் மக்களுக்கான கட்சியாக பா.ஜ.க. செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

* பா.ஜ.க. கட்சியில் இருந்து அமைச்சர்கள் வருவார்கள்.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாளை தமிழகம் வர உள்ளதாகவும், நாளை அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என்று வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற India Today கருத்தரங்கில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "NDA கூட்டணியில், ஆட்சியில் பங்கு என்ற பிரச்சனையே இல்லை. கூட்டணியில் இருப்போரும் அவ்வாறு கேட்கவில்லை" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com