மும்பை தொடர் தாக்குதல் வழக்கு- ராணாவுக்கு மேலும் 12 நாட்கள் என்.ஐ.ஏ. காவல் நீட்டித்து உத்தரவு

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை 18 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.ராணாவை மேலும் 12 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மும்பை தொடர் தாக்குதல் வழக்கு- ராணாவுக்கு மேலும் 12 நாட்கள் என்.ஐ.ஏ. காவல் நீட்டித்து உத்தரவு
Published on

மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக இன்று இந்தியா கொண்டு வரப்பட்டார்.

டெல்லி வந்தடைந்ததும் என்.ஐ.ஏ. முறையாக ராணாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.

தஹாவூர் ராணாவை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் டெல்லி பாட்டியாலா கோர்ட் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 20 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். என்.ஐ.ஏ. மனுவை விசாரித்த சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிபதி சந்தர் ஜித் சிங், ராணாவை காவலில் எடுக்க உத்தரவிட்டார்.

பின்னர், மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை 18 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், ராணாவை மேலும் 12 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ராணாவுக்கான என்ஐஏ காவல் இன்றுடன் நிறைவடைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராணாவுக்கு கூடுதலாக 12 நாட்கள் என்ஐஏ காவலை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com