சென்னையை துரத்தும் மோன்தா... 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்.
சென்னையை துரத்தும் மோன்தா... 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
Published on

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வங்கக்கடலில் முதலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. இதனை தொடர்ந்து தற்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாளை மறுநாள் புயலாக உருவாக உள்ளது. இந்த புயலுக்கு 'மோன்தா' என்று தாய்லாந்து பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகும் 'மோன்தா' புயல் காரணமாக சென்னைக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னையில் இன்றும், நாளையும் கனமழையும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்றும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com