என் வீட்டுக்கு வாங்க என அழைத்த மோடி... கலைஞர் கூறிய பதில் - நினைவுகூர்ந்த ஜெகத்ரட்சகன்

திமுக கூட்டத்தில் எம்.பி. ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டு உரையாற்றினார். கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தபோது நடந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
என் வீட்டுக்கு வாங்க என அழைத்த மோடி... கலைஞர் கூறிய பதில் - நினைவுகூர்ந்த ஜெகத்ரட்சகன்
Published on

திருவள்ளூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் எம்.பி. ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தபோது நடந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

கூட்டத்தில் பேசிய எம்.பி. ஜெகத்ரட்சகன், "கலைஞர் உடல்நிலை சரியில்லாதபோது அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி அவரது வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது இவ்வளவு செல்வாக்கு படைத்த நீங்கள் இப்படி சிறிய வீட்டில் இருக்கிறீர்களே. டெல்லியில் எனக்கு பெரிய வீடு இருக்கிறது. என் வீட்டுக்கு வாங்க என பிரதமர் மோடி அன்று கலைஞரை அழைத்தார். ஆனால் "எனக்கு 2 கோடி தொண்டர்கள் இருக்காங்க.. அதனால் உங்கள் வீடு பத்தாது என கலைஞர் சிரித்துக்கொண்டே கூறிவிட்டார்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com