தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்டுள்ளது- மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காடாக அதிகரித்துள்ளது.நாட்டில் எந்த பெரிய ஒரு மாநிலமும் பெறாத வளர்ச்சியை தமிழகம் அடைந்துள்ளது.
தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்டுள்ளது- மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2,538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார். உதவிப்பொறியாளர், நகரமைப்பு அலுவலர், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வானோருக்கு நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழக பொருளாதாரம் 11.19 சதவீதமாக உயர்ந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்கிறேன்.

* தமிழகத்தின் பொருளாதாரம் இரட்டை இலக்கமாக வளர்ந்துள்ளது என மத்திய அரசு கூறி உள்ளது.

* ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி இரட்டை இலக்கமாக இருந்தது.

* தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்டுள்ளது.

* திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

* பட்ஜெட்டில் நாம் கணித்ததை விட 2.2 விழுக்காடு அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சியை எட்டி உள்ளோம்.

* 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தி.மு.க. ஆட்சியில் தான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் எட்டி உள்ளது.

* இந்தியாவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக தமிழகம் உள்ளது.

* தமிழக மக்களுக்கு வெற்றி செய்தியை காணிக்கையாக்குகிறேன்.

* தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி தான் நேற்று இரவிலிருந்து talk of thd town, talk of the nation ஆக உள்ளது.

* நாட்டில் எந்த பெரிய ஒரு மாநிலமும் பெறாத வளர்ச்சியை தமிழகம் அடைந்துள்ளது.

* இன்னும் அதிகமான உயரத்தை அடைவதற்கான பயணத்தை தொடர்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com