5 ஆண்டுகளில் 1.56 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது - மு.க.ஸ்டாலின்

ஒவ்வொரு வீட்டையும் அவர்களது பதவிக்கேற்ப அடையாளப்படுத்தியது தான் திராவிட மாடல் சாதனை.இளைஞர்கள் தான் தமிழ்நாட்டின் பலம், நீங்கள் முன்னேறினால் தான் தமிழ்நாடு முன்னேறும்.
5 ஆண்டுகளில் 1.56 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது - மு.க.ஸ்டாலின்
Published on

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9801 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

* தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உயர்த்தும் வகையில் பொறுப்புணர்வு கூடி உள்ளது.

* ஒவ்வொரு வீட்டையும் அவர்களது பதவிக்கேற்ப அடையாளப்படுத்தியது தான் திராவிட மாடல் சாதனை.

* தமிழ்நாட்டை தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக நிலைநிறுத்த தொடர்ந்து பாடுபடுவேன்.

* அரசின் திட்டங்கள் மக்களுக்கு சேர்ந்து இருப்பதற்கு முக்கியமான காரணம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான்.

* ஒரு கிராம நிர்வாக அலுவலர் சரியாக இருந்தால் அந்த கிராமம் வளர்ச்சி அடையும்.

* டி.என்.பி.எஸ்.சி. மூலம் 45,126 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

* ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 12,894 பேர் பணியில் சேர்ந்துள்ளனர்.

* கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இல்லம் தேடி கல்வி, உங்களுடன் ஸ்டாலின் ஆகியவை முன்னோடி திட்டங்கள்.

* கடந்த 5 ஆண்டுகளில் 1.56 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது.

* தனியார் முதலீட்டில் 38 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்திருக்கிறோம்.

* இளைஞர்கள் தான் தமிழ்நாட்டின் பலம், நீங்கள் முன்னேறினால் தான் தமிழ்நாடு முன்னேறும்.

* மனசாட்சியுடன் நேர்மையாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com