வெரைட்டி வெரைட்டியா வடை சுட்டுக்கொண்டிருக்கிறார் இ.பி.எஸ். - மு.க.ஸ்டாலின் தாக்கு

தமிழ்நாட்டை குறை சொல்லி பேச பா.ஜ.க.வினருக்கு தகுதி இருக்கிறதா?தமிழ்நாடு சென்னையில் இருந்து ஆளப்பட வேண்டும், டெல்லியில் இருந்து அல்ல.
வெரைட்டி வெரைட்டியா வடை சுட்டுக்கொண்டிருக்கிறார் இ.பி.எஸ். - மு.க.ஸ்டாலின் தாக்கு
Published on

நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* எப்போது தான் வன்முறையை விட்டு வளர்ச்சியை பற்றி பா.ஜ.க.வினர் பேசுவார்கள்?

* நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவெடுக்க இவர்கள் யார்?

* தமிழ்நாட்டை குறை சொல்லி பேச பா.ஜ.க.வினருக்கு தகுதி இருக்கிறதா?

* தமிழ்நாட்டு மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

* தமிழ்நாடு சென்னையில் இருந்து ஆளப்பட வேண்டும், டெல்லியில் இருந்து அல்ல.

* வாய்க்கு வந்தபடி எல்லாம் வடை சுட்டுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி

* நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருவர் ரூ.15 லட்சம் தரேனு வடை சுட்டமாதிரி, இப்போ வெரைட்டி வெரைட்டியா இ.பி.எஸ். வடை சுட்டுட்டு இருக்கிறார். ஆனால் இந்த வடைகளை நம்ப மக்கள் தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com