சிறுபான்மையினர் சம உரிமைகளுக்கு தகுதியானவர்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது.வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தின் பிரதிபலிப்பு.
சிறுபான்மையினர் சம உரிமைகளுக்கு தகுதியானவர்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

மத மாற்ற புகாரில் கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

சத்தீர்கரில் பஜ்ரங் தள் அமைப்பினரால் கேரள கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தல், பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாவது கவலையளிக்கிறது.

வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தின் பிரதிபலிப்பு. சிறுபான்மையினரை பயமுறுத்தக் கூடாது.

இந்தியாவில் சிறுபான்மையினர் கண்ணியத்திற்கும் சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com