ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அரசை வலியுறுத்தி வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை
Published on

பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வைத்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com