15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி

ரூ.34,237 கோடியில் செயல்படுத்தப்படும் 15 புதிய முதலீட்டு திட்டங்கள் மூலம் 55,096 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.ஹூண்டாய் நிறுவனத்திற்கான விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
Published on

தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று பகல் 12 மணியளவில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* 15 முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* ரூ.34,237 கோடியில் செயல்படுத்தப்படும் 15 புதிய முதலீட்டு திட்டங்கள் மூலம் 55,096 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

* ஹூண்டாய் நிறுவனத்திற்கான விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தொழில் துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com