அன்புக்கரசின் அன்புக்கு கட்டுப்படுவேன்.. பேருந்து வசதி கேட்ட சிறுவனுக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அவர்களது பெயர், ஊர், பள்ளி வகுப்பு விவரங்களை கேட்டறிந்தார். சிறுவனின் தோளில் கை போட்டவாறு சிறிது தூரம் நடந்து வந்து நன்றாக படிக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.
அன்புக்கரசின் அன்புக்கு கட்டுப்படுவேன்.. பேருந்து வசதி கேட்ட சிறுவனுக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு
Published on

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள பி.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதியதாக ஆய்வக கட்டிடம் கட்டும் பணிகளை தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி மாணவிகளின் கையால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அவர்களது பெயர், ஊர், பள்ளி வகுப்பு விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ஆத்திகுளத்தைச் சேர்ந்த சக்திகாளியம்மன் என்ற மாணவியிடம் பேசிய அமைச்சர் பள்ளிக்கு எவ்வாறு வருகிறார் என்பது குறித்து உரையாடினார். அவரது அருகில் வந்த சிறுவன் அன்புக்கரசு, 'நானும் ஆத்திகுளத்தில் இருந்து நடந்து தான் சார் பள்ளிக்கு வரேன் பஸ் வரவில்லை' என்று தெரிவித்தார்.

அந்த சிறுவனின் பெயரை கேட்ட அமைச்சர் அன்புக்கரசு என்று சொன்னவுடன், 'உன்னுடைய அன்புக்கு கட்டுப்பட்டு உங்க ஊருக்கு பஸ் விடுறேன். முதல் பஸ் விட்டதும் உன்னை தான் முதலில் ஏற்றி விடுவோம்' என்று கலகலப்பாக பேசினார்.

பின்னர், சிறுவனின் தோளில் கை போட்டவாறு சிறிது தூரம் நடந்து வந்து நன்றாக படிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார். அதேபோல், அருகில் இருந்த மாணவி ஒருவர் கைகளை கட்டிக்கொண்டு பேசியதை பார்த்த அமைச்சர், கையை கட்ட வேண்டாம் எனக்கூறி இயல்பாக உரையாடினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com