அண்ணா அறிவாலயத்தை அண்ணாமலையால் நெருங்கக்கூட முடியாது - சேகர்பாபு

அண்ணாமலை எங்கு போட்டியிட்டாலும் தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டர் கூட அவரை புறமுதுகிட்டு ஓடச்செய்வார்.2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைப்பர்.
அண்ணா அறிவாலயத்தை அண்ணாமலையால் நெருங்கக்கூட முடியாது - சேகர்பாபு
Published on

அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவாமல் விடமாட்டேன் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில் அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

* தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் அறிவாலயத்தை நெருங்கக்கூட முடியாது.

* தி.மு.க.வை அழிக்க நினைத்தோர் மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு.

* அண்ணாமலை எங்கு போட்டியிட்டாலும் தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டர் கூட அவரை புறமுதுகிட்டு ஓடச்செய்வார்.

* ஆணவமாக பேசுவோருக்கு பதிலளிக்கும் வகையில் 2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைப்பர்.

* தி.மு.க. தொண்டர்கள் கூட அரசியலை கரைத்து குடித்தவர்கள். அண்ணாமலை போல் இறக்குமதி செய்யப்பட்டவர்களல்ல என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com