அடையாறு சாஸ்திரி நகரில் நவீன உடற்பயிற்சிக் கூடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் கொண்டு வரப்பட்டு வருகிறது.
அடையாறு சாஸ்திரி நகரில் நவீன உடற்பயிற்சிக் கூடம்  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அவ்வாறாக அடையாறு மண்டலத்தில் சாஸ்திரி நகரில் மாநகராட்சியின் மூலதன நிதியில் நவீன உடற்பயிற்சி உபகரணங்களால் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்து, உடற்பயிற்சி மேற்கொண்டார்.

முன்னதாக, இக்கட்டிடத்தின் தரைத் தளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மையத்தினை திறந்து வைத்து, பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், மண்டல அலுவலர் செந்தில் குமரன், கண்காணிப்பு பொறியாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com