'உங்க கனவை சொல்லுங்கள்'... புதிய திட்டம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்

நிதி நெருக்கடி இருந்தாலும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
'உங்க கனவை சொல்லுங்கள்'... புதிய திட்டம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்
Published on

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-

* கொரோனா தொற்றில் இருந்து தமிழக அரசு மீண்டு பொருளாதாரத்தில் இரட்டை இலக்கை எட்டியுள்ளது.

* இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலமாக உள்ளது.

* நிதி நெருக்கடி இருந்தாலும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

* தமிழக அரசின் புதிய திட்டம் ஒன்றை பற்றி பேசுவதற்காக வந்துள்ளேன்.

* உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், காலை உணவு, தாயுமானவர் திட்டம் என அனைத்து திட்டங்களாலும் பெருமை.

* மக்கள் வரியிலிருந்து கிடைக்கப்பெறும் பணத்தை கொண்டு பயனுள்ள திட்டங்களையே செயல்படுத்துகிறோம்.

* ஒரு கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

* 'உங்க கனவை சொல்லுங்கள்' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

* ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள கனவினை தெரிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

* உங்க கனவை சொல்லுங்க திட்டத்திற்காக 50,000 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

* தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்றுஅவர்களின் கனவுகள் பற்றி ஆய்வு மேற்கொள்வார்கள்.

* தமிழக அரசின் திட்டங்களில் எது உங்களுக்கு பயனுள்ள திட்டம்? உங்களின் கனவு என்ன? என்ற கேள்விகளை கேட்டு பதில் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

* மேலும், இளைஞர்களின் கனவுகள் என்ன என்றும் கேட்டறிய உள்ளோம். அயலக தமிழர்களிடமும் அவர்களின் கனவுகள் குறித்து கேட்டறிய உள்ளோம்.

* செயலி மூலம் அவர்களின் பதிலை பெற்று பதிவு செய்து கனவு அட்டை என்ற புதிய அட்டை வழங்கப்படும்.

* உங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்தின் கனவை அறிய முயல்கிறோம்.

* அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் அடிப்படையில் எதிர்கால திட்டங்கள் தீட்டப்படும்.

* 2030-ம் ஆண்டிற்குள் செய்ய வேண்டிய பணிகளுக்காக உங்க கனவை சொல்லுங்க திட்டம்...

* 'உங்க கனவை சொல்லுங்க' திட்டத்தை வருகிற 9-ந்தேதி பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

* ஆட்சியர்கள் தலைமையில் கருத்தரங்கங்கள் நடத்தி மக்களின் கனவுகளை கேட்டறிய உள்ளதாக கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com