அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

வீட்டில் தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்துள்ளார்.மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
Published on

திமுக அமைச்சரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்காகத் தொடர் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். 

இந்நிலையில் இன்று வீட்டில் தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com