தமிழக அமைச்சரவையில் மீண்டும் மனோ தங்கராஜ்- பால்வளத்துறை ஒதுக்கீடு

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார்.வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தமிழக அமைச்சரவையில் மீண்டும் மனோ தங்கராஜ்- பால்வளத்துறை ஒதுக்கீடு
Published on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையில் 6வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார்.

இதேபோல், வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்களுக்கு, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் முத்துச்சாமிக்கு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக கைத்தறித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் மனோ தங்கராஜ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மனோ தங்கராஜூக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா குறித்து அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், கிண்டி ராஜ்பவனில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் மனோ தங்கராஜ் அமைச்சராக பதவி ஏற்றார்.

மனோ தங்கராஜூக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சர் மனோ தங்கராஜூக்கு பால்வளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பால்வளத் துறையை கவனித்துக் கொண்ட நிலையில் மீண்டும் அதே இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com