அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

அமைச்சர் மீதான புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அமைச்சர் கே.என்.நேரு மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
Published on

தமிழக நகராட்சி அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார்கள் குறித்து அமலாக்கத்துறை விரிவான விசாரணையை மேற்கொண்டிருந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில், உரிய ஆதாரங்களுடன் வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை 2 முறை கடிதம் எழுதி இருந்தது. இருப்பினும், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் ஜே.எஸ். இன்பதுரை கடந்த மாதம் 7-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அமலாக்கத்துறை வழங்கிய வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அமைச்சர் மீதான புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

இருப்பினும், அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள் தீவிரமானவை என்பதால், அதன் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com