மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பால ஊழலை தார் பூசி மறைக்க முடியாது - அன்புமணி கண்டனம்

தரமற்ற முறையில் எல் வடிவ பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரரை உடனடியாக கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.ஊழலுக்கு காரணமான அனைவரும் நீதியின் தண்டனையை கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும்.
மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பால ஊழலை தார் பூசி மறைக்க முடியாது - அன்புமணி கண்டனம்
Published on

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் எல் வடிவ மேம்பாலம் தரம் மற்றும் பலவீனமாகவும், அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் கட்டப்பட்டிருப்பதாக தொடர்ந்து நான் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், இப்போது மேம்பாலத்தின் மீது அவசர அவசர மாக தார்ச்சாலை அமைத்திருக்கிறது.

உலகிலேயே புதிதாக அமைக்கப்பட்ட கான்க்ரீட் பாலத்தின் மீது தார்ச்சாலை அமைத்த ஒரே கம்பெனி கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டைச் சீரழித்த தி.மு.க. கம்பெனி தான். இத்தகைய தார்பூச்சு வேலைகளின் மூலம் பாலம் கட்டுவதில் நடந்த ஊழலை மூடி மறைக்க முடியாது.

மேம்பாலத்தின் மீது தார்ச்சாலை அமைப்பது போன்ற பயனற்ற செயல்களை செய்வதற்கு பதிலாக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டும்.

எல் வடிவ மேம்பாலத்தின் குறைபாடுகள் குறித்து பாலத்திற்கு அடுத்த வளாகத்தில் உள்ள ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும். அதில் தெரியவரும் தரவுகளின் அடிப்படையில் பாலத்தை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தரமற்ற முறையில் எல் வடிவ பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரரை உடனடியாக கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.

இவற்றைச் செய்யாமல் எல் வடிவ மேம்பால ஊழலை மறைக்க தி.மு.க. அரசு என்ன தான் ஏமாற்று வேலைகளை செய்தாலும் ஊழலுக்கான தண்டனையில் இருந்து தப்ப முடியாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் எல் வடிவ மேம்பாலம் கட்டப்பட்டதில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணைக்கு ஆணையிடப்படும். அப்போது ஊழலுக்கு காரணமான அனைவரும் நீதியின் தண்டனையை கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com