அரியலூர் அருகே தண்டவாளத்தில் மண்சரிவு - பயணிகள் ரெயில் நிறுத்தம்

வெள்ளூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பணியின்போது மண்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அரியலூர் அருகே தண்டவாளத்தில் மண்சரிவு - பயணிகள் ரெயில் நிறுத்தம்
Published on

விழுப்புரத்தில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது. வெள்ளூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பணியின்போது மண்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் விழுப்புரத்தில் இருந்து அரியலூர் வழியாக திருச்சி சென்ற பயணிகள் ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. சுமார் 45 மணிநேரமாக நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com