கொல்கத்தா- சென்னை விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து

ரெயில் எலக்ட்ரிக் போஸ்டில் மோதிய பிறகு ரயில் தடம் புரண்டதாக தகவல்.விபத்தால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
கொல்கத்தா- சென்னை விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து
Published on

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஜல்பைகுரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தபோது, ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ ரெயில் நிலையம் அருகே ரெயில் தடம் புரண்டுள்ளது. ரெயில் விபத்து, தண்டவாளத்தை ஒட்டி இருந்த எலக்ட்ரிக் போஸ்டில் மோதிய பிறகு ரயில் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே மூத்த அதிகாரிகள் விபத்து குறித்து ஆய்வு செய்துள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த விபத்தால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com