கரூர் துயரம் - வேலுச்சாமிபுரத்தில் கமல்ஹாசன் MP நேரில் ஆய்வு

நீதிமன்றங்களில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் துயரம் - வேலுச்சாமிபுரத்தில் கமல்ஹாசன் MP நேரில் ஆய்வு
Published on

கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி அன்று, தவெக சார்பில் நடைபெற்ற விஜயின் பரப்புரையின்போது கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நீதிமன்றங்களில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 41 பேர் உயிரிழந்த கரூர் வேலுச்சாமிபரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சென்று சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com