மேற்குவங்கத்திலும் மம்தாவின் நட்சத்திர பேச்சாளராக ஆர்.என்.ரவி செயல்படுவார் - ஜோதிமணி கிண்டல்

அவரின் தமிழர் விரோத பேச்சும், நடவடிக்கையும் தமிழக மக்கள் விரும்பத்தகாத செயலாக இருந்தது.ஆளுநர் மாளிகையை பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமாக செயல்பட வைத்தார்.
மேற்குவங்கத்திலும் மம்தாவின் நட்சத்திர பேச்சாளராக ஆர்.என்.ரவி செயல்படுவார் - ஜோதிமணி கிண்டல்
Published on

கரூரில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி மாற்றம் செய்யப்பட்டது எங்களுக்கு வருத்தம் தருகிறது. இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு நட்சத்திர பேச்சாளராக இருந்த அவர் மாற்றப்பட்டு உள்ளார். அவரின் தமிழர் விரோத பேச்சும், நடவடிக்கையும் தமிழக மக்கள் விரும்பத்தகாத செயலாக இருந்தது.

ஆளுநர் மாளிகையை பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமாக செயல்பட வைத்தார். கவர்னரை அறிவிப்பு இல்லாமல் திடீரென்று மாற்றம் செய்து விட்டார்கள் என்று மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கவலைப்பட தேவையில்லை. மேற்குவங்கத்திலும் மம்தா பானர்ஜிக்கு நட்சத்திர பேச்சாளராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவார் என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com