வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்- தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது.
வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்- தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?
Published on

சென்னை:

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிலைக்கொண்டுள்ளது. இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதன்பிறகு வங்கக்கடலில் உருவான 'மோன்தா' புயலனாது ஒரிசா அருகே கரையை கடந்ததால் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழைக்கு வாய்ப்பில்லாமல் போனது.

இதனை தொடர்ந்து நேற்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயலின் நகர்வை பொறுத்து தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com