நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ள 5 மாவட்டங்கள்...

சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ள 5 மாவட்டங்கள்...
Published on

சென்னை :

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதிகள் இணைந்து வருவதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வருகிற 4 மற்றும் 5-ந்தேதிகளில் கனமழைக்கு வாயப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே நேரம் மதிய வேளையில் வெயின் தாக்கம் 35 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பதிவாகக் கூடும்

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com