Weather Update: கனமழைக்கு வாய்ப்புள்ள 16 மாவட்டங்கள்

7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் வருகிற 10-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும்.
Weather Update: கனமழைக்கு வாய்ப்புள்ள 16 மாவட்டங்கள்
Published on

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கனமழை பெய்யும் மழை 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மதிய வேளைகளில் 36 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகக்கூடும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் வருகிற 10-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com