தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரதிநிதி நான் தான்- த.வெ.க தலைவர் விஜய்

ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி. தமிழ்நாடு தான் தவெக, தவெக தான் தமிழ்நாடு.. வரும் தேர்தலில் வசில் பறக்கும்.
தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரதிநிதி நான் தான்- த.வெ.க தலைவர் விஜய்
Published on

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார்.

தவெக தலைவர் விஜய் உரையை தொடங்கிய உடன் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக முழுக்கமிட்டனர்.

அப்போது அவர் பேசியதாவது:-

மக்களின் உண்மையான பிரதிநிதி என்பதால் தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு என முந்தைய கூட்டத்தில் கூறினேன்.

பயமுறுத்தும் வேலை இனி எடுபடாது, அதனால் தான் நான் பேசுவதை மாற்றிபேசி அவதூறு பரப்புகின்றனர்.

ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என குழந்தைகள் கூட சொல்லத்தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாடு தான் தவெக, தவெக தான் தமிழ்நாடு.. வரும் தேர்தலில் வசில் பறக்கும்.

எனக்கும் தமிழ்நாட்டு மக்களும் இடையில் யாராலும் நுழைய முடியாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com