நானும் தூய்மைப் பணியாளர்கள் பக்கமே நிற்கிறேன் - வைரமுத்து

தூய்மைப் பணியாளர்களுக்கு 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் பேரணி சென்றனர்.
நானும் தூய்மைப் பணியாளர்கள் பக்கமே நிற்கிறேன் - வைரமுத்து
Published on

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது

இந்நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், " ஓர் உண்மையான சமூக மனிதன் தொழிலாளிகள் பக்கமே நிற்பான்; நானும் தூய்மைப் பணியாளர்கள் பக்கமே நிற்கிறேன்

சராசரி மனிதர்களால் சாத்தியப்படாத தூய்மைப் பணியை நுரையீரலைப் பணயம்வைத்து ஈடேற்றுகிற ஈடற்ற தியாகிகள் அவர்கள். அவர்கள் எதிர்பார்ப்பது கருணையை அல்ல; உரிமையை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவை ஆறு அம்சத் திட்டத்தால் அவர்களின் வாழ்வுக்கு வளம்சேர்க்கவே கருதுகிறது.

தூய்மைப் பணியாளர்கள் விரைவில் வேலைக்குத்திரும்ப வேண்டும்;கோரிக்கைகள் காலப்போக்கில் கனிந்தே தீரும்

இது தொழிலாளிகள் உலகம் அவர்கள் நலம் சமுதாய நலம். அனைவர்க்கும் விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com