பாவிகளா, அப்படிப்பட்ட பெரியார் குறித்து இப்படியா பேசுவது? - அமைச்சர் துரைமுருகன்

இந்தி வந்தால் தமிழ் அழியும் என்று முதலில் 1938 இல் சொன்னது பெரியார் தான் தன்னுடைய 92 வயதிலும் மூத்திரச் சட்டியுடன் கூட்டம் கூட்டமாக சென்று பேசியவர் பெரியார்.
பாவிகளா, அப்படிப்பட்ட பெரியார் குறித்து இப்படியா பேசுவது? - அமைச்சர் துரைமுருகன்
Published on

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "இந்தி வந்தால் தமிழ் அழியும் என்று முதலில் 1938 இல் சொன்னது பெரியார் தான். இன்று பெரியார் ஒழிக என்று சொல்கிறார்கள் இதைவிட நன்றி கெட்டத்தனம் வேறு ஏதாவது இருக்குமா? பெரியார் இல்லாவிட்டால் இந்த நாடு என்னவாகியிருக்கும். குட்டிசுவராகி போயிருக்கும்.

நான் இன்றைக்குக்கு எம்.ஏ. படித்துள்ளேன். கிட்டத்தட்ட 50 வருடமா சட்டசபையில் இருக்கிறேன். 5 - 6 முறை மந்திரியாக இருந்திருக்கிறேன். நான் என்ன ராஜா வீடு பையனா? நான் ஒரு ஏழை விவசாயியின் மகன். அவன் படிப்பதற்கும் இந்த நிலைமைக்கும் கொண்டு வந்தது பெரியார் தான்.

பெரியாரை பற்றி பேசுவது மிக கேவலமான செயல். தன்னுடைய 92 வயதிலும் மூத்திரச் சட்டியுடன் கூட்டம் கூட்டமாக சென்று பேசியவர் பெரியார். பாவிகளா, அப்படிப்பட்ட பெரியார் குறித்து இப்படியா பேசுவது?" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com