உயர்ந்த வாக்குவங்கி... 35 இடங்களை கோரும் பா.ஜ.க. - சம்மதிக்காத எடப்பாடி!

நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கு வங்கி அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளைக் கோருகிறது. கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.
உயர்ந்த வாக்குவங்கி... 35 இடங்களை கோரும் பா.ஜ.க. - சம்மதிக்காத எடப்பாடி!
Published on

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்போது தொகுதிப் பங்கீட்டில் இறங்கியுள்ளன அரசியல் கட்சிகள். அந்த வகையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக இந்த தேர்தலில் போட்டியிட 35 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக இன்று (பிப். 24) வழங்கியுள்ளது. இதில், நேரடியாகப் போட்டியிடுவதற்காக 30 முதல் 35 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையின் ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், வேளச்சேரி, திருத்தணி, காஞ்சிபுரம், ஆவடி, திருத்தணி, காஞ்சிபுரம், தென்காசி, திருவண்ணாமலை, பழனி ஆகிய தொகுதிகள் பட்டியலில் அடங்கும். பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஆகியோர் இந்தப் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளனர்.  

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கு வங்கி அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளைக் கோருகிறது.  ஆனால் அதிமுக தலைமை சுமார் 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகவும், தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி இதுவரை சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 45 தொகுதிகளை கோரிவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com