வன்முறையை தூண்டியதாக வழக்கு.. திருமாவளவனை விடுவித்த உயர்நீதிமன்றம்

திருமாவளவன் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை
வன்முறையை தூண்டியதாக வழக்கு.. திருமாவளவனை விடுவித்த உயர்நீதிமன்றம்
Published on

கடந்த 2014 இல் புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் மீது ஓதியம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை புதுச்சேரி அமர்வு நீதிமன்றம் கடந்தாண்டு தள்ளுபடி செய்தது.

உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி திருமாவளவன் மீது பதியப்பட்ட வழக்கில் இருந்து அவரை விடுவித்தும் கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com