சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தை குளிர்வித்த மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு லேசான மழை பெய்தது.மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது;
சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தை குளிர்வித்த மழை
Published on

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு லேசான மழை பெய்தது.

சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் காலையில் வாட்டிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. திடீர் மழையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com