தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை- எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பெய்யும் போது 40 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை- எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
Published on

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம்.

நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பதூர் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மாவட்டங்களில் கனமழை பெய்யும் போது 40 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com