என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - கமல்ஹாசன்

மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - கமல்ஹாசன்
Published on

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்ய தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரு சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால், முதலில் பெண்களின் வாழ்வில் ஏற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இதைத் தமிழ்நாடு புரிந்துகொண்டது, அதன் வழியே செயல்படுகிறது என்பதன் அடையாளமாக எத்தனையெத்தனை திட்டங்கள்!

புதுமைப் பெண் திட்டம் — நாளைய எதிர்காலத்துக்கான விதை

விடியல் பயணம் — ஒளியாய் நகரும் நம்பிக்கை நடை

மகளிர் உரிமைத் தொகை - பெண்களின் எழுச்சியில் மாநிலத்தின் உயர்வு

இவை வெறும் ஏட்டுத் திட்டங்களல்ல… மாற்றத்துக்கான நாற்றங்கால்கள்.

இவை அத்தனையையும் செய்து காட்டியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய நண்பர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com