அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை!

ஜிஎஸ்டி முறைகேடுகள் மூலம் வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனைமூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது
அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை!
Published on

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும், திமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திராவும், அவரது  துவாரகநாதனும் குடும்பத்துடன் திண்டுக்கல் ஆர்.எம். காலனி அருகே உள்ள செவாலியே சிவாஜி நகரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் இந்திராவின் வீட்டில் திடீரென கோவை ஜிஎஸ்டி  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். 1 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நீடித்த நிலையில், திமுக தொண்டர்கள் அவர் வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வீடு மட்டுமின்றி துவாரகநாதனுக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனத்திலும் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நிறுவனத்தில் ஜிஎஸ்டி முறைகேடுகள் மூலம் வரி ஏய்ப்பு நடந்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ. பெரியசாமியின் இல்லம், அவரது மகன் செந்தில் குமார் வீடு, இந்திரா வீடு மற்றும் 3 வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com