தங்கம் விலை இன்று 2-வது முறையாக சரிவு: சவரனுக்கு 1560 ரூபாய் குறைந்தது..!

ஒரு கிராம் 15465 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1, 23,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.காலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்திருந்தது.
தங்கம் விலை இன்று  2-வது முறையாக சரிவு: சவரனுக்கு 1560 ரூபாய் குறைந்தது..!
Published on

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேலை தாக்குதலை தொடர்ந்து, அதற்கு ஈரான் வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்திருந்தது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று காலை சற்றே குறைந்தது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.1,25,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. காலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்த நிலையில், மாலை சவரனுக்கு 1480 ரூபாய் குறைந்தது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1560 ரூபாய் குறைந்துள்ளது.

ஒரு கிராம் 15465 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1, 23,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இரண்டு முறை சரிவை சந்தித்த நிலையிலும், வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

2-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,25,280

1-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,200

28-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,400

27-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

2-03-2026- ஒரு கிராம் ரூ.315

1-03-2026- ஒரு கிராம் ரூ.325

28-02-2026- ஒரு கிராம் ரூ.320

27-02-2026- ஒரு கிராம் ரூ.295

26-02-2026- ஒரு கிராம் ரூ.295

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com