GOLD PRICE TODAY : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை... எவ்வளவு தெரியுமா?

தங்கம் தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
GOLD PRICE TODAY : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை... எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,025-க்கும் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் தங்கம் புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 375 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

25-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

24-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

23-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,400

22-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

21-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,320

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

25-1-2026- ஒரு கிராம் ரூ.65

24-1-2026- ஒரு கிராம் ரூ.365

23-1-2026- ஒரு கிராம் ரூ.345

22-1-2026- ஒரு கிராம் ரூ.340

21-1-2026- ஒரு கிராம் ரூ.345

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com