GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை- எவ்வளவு தெரியுமா?

தங்கத்துக்குப்போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை- எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது.

இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860-க்கும் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்துக்குப்போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

22-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

21-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

20-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

19-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000

18-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

22-02-2026- ஒரு கிராம் ரூ.290

21-02-2026- ஒரு கிராம் ரூ.290

20-02-2026- ஒரு கிராம் ரூ.270

19-02-2026- ஒரு கிராம் ரூ.270

18-02-2026- ஒரு கிராம் ரூ.260

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com