GOLD PRICE TODAY : புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... இன்றைய நிலவரம்

நேற்று தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
GOLD PRICE TODAY : புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... இன்றைய நிலவரம்
Published on

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், வார தொடக்க நாளான நேற்றும் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120-க்கும் சவரனுக்கு 1,760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 287 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,170-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 292 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

12-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,960

11-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200

10-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200

9-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

8-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,000

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

12-1-2026- ஒரு கிராம் ரூ.287

11-1-2026- ஒரு கிராம் ரூ.275

10-1-2026- ஒரு கிராம் ரூ.275

9-1-2026- ஒரு கிராம் ரூ.268

8-1-2026- ஒரு கிராம் ரூ.272

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com