GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?

நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை:

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று அதன் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,080-க்கும் நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,0060 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

08-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

07-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,080

06-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

05-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

04-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

08-07-2025- ஒரு கிராம் ரூ.120

07-07-2025- ஒரு கிராம் ரூ.120

06-07-2025- ஒரு கிராம் ரூ.120

05-07-2025- ஒரு கிராம் ரூ.120

04-07-2025- ஒரு கிராம் ரூ.120

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com