GOLD PRICE TODAY : ஜெட் வேகத்தில் ஏறும் வெள்ளி விலை... இன்றைய நிலவரம்

தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது.தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
GOLD PRICE TODAY : ஜெட் வேகத்தில் ஏறும் வெள்ளி விலை... இன்றைய நிலவரம்
Published on

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,870-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 283 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

6-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,640

5-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,080

4-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

3-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

2-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,640

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

6-1-2026- ஒரு கிராம் ரூ.271

5-1-2026- ஒரு கிராம் ரூ.266

4-1-2026- ஒரு கிராம் ரூ.257

3-1-2026- ஒரு கிராம் ரூ.257

2-1-2026- ஒரு கிராம் ரூ.260

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com