ராமதாசும், அன்புமணியும் இணைந்து செயல்பட ஜி.கே.மணி அழைப்பு

பா.ம.க. தலைவர் பதவி குறித்த ராமதாசின் அறிவிப்பு எதிர்பாராத ஒன்று.நேற்று தான் ஐயா அறிவித்தார், வேகமாக இருப்பார் என்பதால் நேற்று அவரை சந்திக்கவில்லை.
ராமதாசும், அன்புமணியும் இணைந்து செயல்பட ஜி.கே.மணி அழைப்பு
Published on

பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பேரியக்கத்தை தொடங்கிய நிறுவனர் ராமதாஸ் ஆகிய நான், நிறுவனர் என்பதோடு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பையும் நானே ஏற்றுகொள்கிறேன்.

தேர்தலின் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்துவரும் அன்புமணி ராமதாசை பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன் என்று நேற்று அவர் அறிவித்தார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாசின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அன்புமணியை கட்சி தலைவர் பதவியில் நீக்கியது தொடர்பாக தலைவர் ராமதாசை சந்தித்து சமாதானம் செய்வதற்காக தைலாபுரத்திற்கு ஜி.கே.மணி வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

* பா.ம.க. தலைவர் பதவி குறித்த ராமதாசின் அறிவிப்பு எதிர்பாராத ஒன்று.

* நேற்று தான் ஐயா அறிவித்தார், வேகமாக இருப்பார் என்பதால் நேற்று அவரை சந்திக்கவில்லை.

* ராமதாசும், அன்புமணியும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com